bhoomi-mudra or Nila muthra benefits
பூமி முத்திரை அல்லது நிலமுத்திரை பலன்கள்நில முத்திரை
மோதிர விரல்நுனியும் கட்டை விரல்நுனியும் சேரும்போது நிலமுத்திரை உண்டாகிறது . கட்டைவிரல் நெருப்பைக் குறிக்கும், மோதிரவிரல் மண்மூலகத்தைக் குறிக்கும் . இந்த முத்திரை நம் உடலின் ”மண்” என்ற மூலப் பொருளை அதிகரித்து ”நெருப்பு ” என்ற மூலப்பொருள் குறைக்கிறது .
மனித உடலின் எலும்புகள் கார்ட்டிலேஜ் தோல் தலைமுடி நகம் தசைகள் உள் உறுப்புகள் அனைத்திலும் மண் என்ற மூலப்பொருள் உள்ளது . நம் உடலே மண்மூலப்பொருலால் ஆனதுதான் . அதனால் மண்ணின் சக்தி அதிகரிக்கப்படும்போது நம் உடலில் சக்தியும் அதிகரிக்கிறது . எலும்பு தசை ஆகியவற்றின் சக்தி அதிகமாகி பயன் பலமடைகின்றன .
“மண்”என்ற மூலப்பொருள் ”வாசனை”யுடன் தொடர்புள்ளது . அதாவது மூக்குடன் தொடர்பு கொண்டது . ஆகவே மூக்கில் ஏற்படும் அனைத்து தொந்தரவுகளும் இம்முத்திரையினால் தீர்கின்றன.
வாதம் பித்தம் கபம் என்ற மூன்றில் கபத்தை இம்முத்திரை அதிகரிக்கிறது . கபம் அதிகமுள்ளவர்கள் இம்முத்திரையை அளவுடன் செய்யவேண்டும் .
தீ நிலத்தை தொடும் போது உடலின் டைனமோ எரிசக்தி ஊட்டப்படுகிறது .
நில முத்திரையின் பயன்கள்
- உடலின் சக்தியை அதிகமாக்குகிறது. நோய்த்தடுப்பு சக்தியை அதிகமாக்கி நம்மை உடல் நலத்துடன் வைக்கிறது .
- உடல் பலவீனத்துடன் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இம்முத்திரை மிகச் சிறந்ததாகும் . உடல் எடையை அதிகரிக்கிறது .
- உடலை மட்டுமல்லாமல் மனதையும் நலம் பெறச்செய்கிறது
- பளபளப்பான சருமத்தைக் கொடுக்கிறது . சருமத்தின் அழகை அதிகரிக்கிறது .
- கல்லீரல் வயிறுபோன்ற உள்ளுருப்புகளைப் பலப்படுத்துகிறது
- உடலின் சோர்வை நீக்கி சக்தியை கொடுக்கிறது .
- மு்டி உதிர்தல் நகம் உடைதல் எலும்பு சம்பந்தமான நோய்கள் தோல்வியாதி இவற்றை சரிசெய்கிறது.
- விட்டமின்கள் சக்தி குறைவினால் உடலில் தளர்ச்சி ஏற்படும்போது இம் முத்திரை உபயோகமாக உள்ளது .
- மனதால் வளைந்து கொடுக்கும் எண்ணத்தையும் திறந்த மனப்பாங்கையும் குறைவான எதிர்ப்பையும் மற்றவர் எண்ணங்களைக் கேட்பதற்கும் இம்முத்திரை உதவுகிறது .
- மூக்கில் ஏற்படும் அனைத்துபாதிப்புகளுக்கும் இம்முத்திரை மூலம் தீர்வு காணலாம் .
- ஆஸ்டியோ பொராசிஸ் ( எலும்புகளின் அடர்த்தி குறைதல் ) ரிக்கட்ஸ் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் தசைகளின் பலவீனம் தசைகளின் செயலிழப்பு ( PARALYSIS ) போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண இம்முத்திரை உதவுகிறது .
- அசிடிடி எனப்படும் வயிறுசம்பந்தமான பிரச்சனை சிறுநீர் கழிக்கும்போதும் மலம் கழிக்கும்போதும் ஏற்படும் எரிச்சல் கைகால் தலையில் உண்டாகும் எரிச்சல் வாய்ப்புண் வயிற்றுப்புண் குடல்புண் மஞ்சள்காமாலை தைராய்டு அதிக அளவில் சுரத்தல் இவற்றிற்கு நிலமுத்திரை மூலம் தீர்வு காணலாம் .
- சுரம் உடலில் அதிக வெப்பம் இவற்றிற்குத் தீர்வு தருகிறது .
- தலைமுடி உதிர்தல் இளநரை இவற்றிற்குத் தீர்வு காணலாம் .
இம் முத்திரையைத் தொடர்ந்து 45 நிமிடங்கள் செய்யலாம் . எந்த நேரத்திலும் செய்யலாம் . குறைந்தபட்சம் 10 நிமிடமாவது செய்யவும் . காலை மற்றும் மாலையிலும் செய்யலாம் . குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சிறந்த நேரமாகும் .