What if I eat non-vegetarian?

 What if I eat non-vegetarian? 

அசைவம் சாப்பிட்டால் என்னவாகும்?

What if I eat non-vegetarian?
What if I eat non-vegetarian?


அசைவம் சாப்பிடக்கூடாத  நாள்

அசைவ உணவு என்பது மனிதருக்கு உடல் வலிமை தரக்கூடிய உணவாகும் . அதேநேரத்தில் மனசக்திக்கு எதிர்பானதாகும் . 
ஒரு பிராத்தனை நடக்கவேண்டுமாகின் குறிப்பிட்ட தெய்வத்தை நினைத்து விரதம் இருக்கச்சொல்வார்கள் . இதில் மிகமுக்கியமாக அசைவ உணவு கூடவேகூடாது என்று சொல்வார்கள் காரணம் நம் பிராத்தனை ஈடேறாது  ஏனெனில் மனதில் விரும்பக்கூடிய ஆசையை நடத்தித்தர வேண்டுமாகின் சுத்த சைவஉணவே உதவுகிறது . அப்படி தங்களுக்கும் எதாவது கோரிக்கை இருக்குமாகின் அசைவத்தை தவிருங்கள் .

தலைமை , புகழ். வெற்றி வேண்டுவோர் ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிடக்கூடாது

மனக்குழுப்பம் விலகவும். குழப்பம் வராமல் தடுக்கவும். சிந்தனை தெளிவு கிடைக்கவும். திங்கள்கிழமை அசைவம் சாப்பிடக்கூடாது

வழக்கில் வெற்றிபெற. அதிகாரம் பெறவும் மண்மனை அடைய விரும்புவோர் செவ்வாய்கிழமை அசைவம் சாப்பிட வேண்டாம்

ஞாபகசக்தி அதிகரிக்கவும் தொழில்வளம் பெருக வேண்டுவோர் புதன்கிழமை அசைவம் சாப்பிட வேண்டாம்

கல்வியில் வெற்றிபெறவும் சிறந்த குழந்தைகள் அமைய வாழ்வில் நல்ல வழிகாட்டியான சிறந்த குரு அமைய வியாழக்கிழமை அசைவம் சாப்பிட வேண்டாம்

செல்வம் பெருகவும், கடன்கள் இருந்தால் தீரவும், செல்வம் குறையாமல் இருக்கவும், நல்ல மணவாழ்க்கை அமையவும் ,சந்தோஷம் நிலைத்திருக்கவும் வெள்ளிக்கிழமை அசைவம் சாப்பிட வேண்டாம்

தரித்திரம் விலகவும் வீண்விரையம் ஏற்படாமல் இருக்கவும் நீதி நேர்மையுடன் மற்றவர் உங்களிடம் நடந்து கொள்ளவும் குலதெய்வம் அருள் கிடைக்கவும் அசைவம் சனிக்கிழமையில் சாப்பிட வேண்டாம்,

இவை அனைத்தும் வேண்டுவோர் அசைவமே சாப்பிட வேண்டாம், பழகிவிட்டது கட்டு கொள்ள முடியவில்லை எனில் குறிப்பாக சாதாரண வாழ்க்கையோ அல்லது திடீர் என்று உயர்ந்து பின்பு சந்ததிகள் கடுமையான துன்பம் படும் நிலையே அமையும் . அல்லது அடிக்கடி ஏற்ற இறக்கம் வாழ்வில் அமையும் .

இதில் இருந்து ஓரளவு தப்பிக்க நம் முன்னோர்கள் சில வழிகளை கூறியுள்ளார்கள், அவை அமாவாசையில் அசைவ உணவை தவிர்த்தால் முன்னோர்கள் ஆசி கிட்டும் , சனிக்கிழமை அசைவ உணவை தவிர்த்தால் குலதெய்வ அருள் கிட்டும் , பௌர்ணமியில் அசைவ உணவை தவிர்த்தால் இஷ்ட தெய்வ அருள் கிட்டும் , தமிழ் மாத பிறப்பில் அசைவ உணவை தவிர்த்தால் நவகிரக அருள் கிடைக்கும் , கிருத்திகை நட்சத்திரத்தில் உணவை தவிர்த்தால் கீர்த்தி அந்தஸ்துள்ள குழந்தைகள் அமைவார்கள் , நீத்தார் திதியில் அசைவ உணவை தவிர்த்தால் பரம்பரை செழிக்கும் வம்சாவிருத்தி தடை இருக்காது  , கோயிலுக்கு செல்லும் நாட்களில் அசைவம் சாப்பிட்டிருந்தால் மகிழ்ச்சியும் செல்வமும் வற்றி போகும் ,  எனவே அசைவ பிரியர்கள் இந்நாட்களையாவது தவிர்த்து விடுங்கள் என முன்னோர்கள் வகுத்து சென்றுள்ளார்கள்,

      (சுய கட்டுப்பாடு உள்ளவர்களுக்கு முடியாதது என்று ஒன்றும் இல்லை)