Wealth will increase if this is followed
இதை கடைபிடித்தால் செல்வம் பெருகும்
Wealth will increase if this is followed |
இதை கடைபிடித்தால் ( Wealth will increase ) செல்வம் பெருகும்
நுனிப்பகுதி லட்சுமி ஸ்தானமாகும் அதாவது கைகால்களின் நுனிவிரலின் நகம் ஆனாலும். இலைகளின் நுனி ஆனாலும் பழங்களின் நுனி( முனைப்பகுதி ) ஆனாலும் சரி. நாக்கின் நுனி இவைகள் யாவும் லட்சுமி ஸ்தானமாக பாவிக்கப்படவேண்டும் ,
நகங்களை
ஒட்ட ஒட்ட
வெட்டக்கூடாது குறிப்பாக
விரத நாட்களான
வெள்ளி செவ்வாய் சனிக்கிழமை மற்றும் பௌர்ணமி
அமாவாசை
போன்ற நாட்களிலும்,
சந்தி வேளையான
அதிகாலை மாலை
வேளையிலும் ராகு எமகண்ட வேளையிலும், உச்சிகால
வேளையிலும் நகம் வெட்டுவதோ பற்களால் கடிப்பதோ
கூடாது . எப்போது
நகம் வெட்டினாலும்
மிக சிறிதளவாவது
நகம் விட்டு
மீதத்தை வேண்டுமானால்
வெட்டலாம், வெட்டிய நகத்தை புதைத்தால் நல்லது
. நெருப்பில் எக்காரணம் கொண்டும் போடக்கூடாது வெட்டிய
நகம் பிணத்திற்கும்.
ரத்தத்திற்கும் சமம் எனவே நகம் வெட்டிய
பின்பு அது
தீட்டு பொருளாகும்
எனவே நகத்தை
வெட்டிய உடன்
அப்புறப்படத்துவதே நல்லது இல்லையேல் தரித்திரம்
குடிகொள்ளும் . வீட்டின் வெளியே கால்படாத இடத்தில் போட்டுவிடலாம் .
நுனி
நாக்கு லட்சுமி
குடிகொண்ட இடமாகும்,
மகா சரஸ்வதியும்.
மகா லட்சுமியும்
ஆட்சி செய்யும்
நாக்கில் சுப
வார்த்தைகள் எதை பேசினாலும் அதன் பலனை
நமக்கும் கொடுப்பார்கள்,
நாக்கில் மிக
சூடான பொருட்கள்
சுவைக்கும் போது நுனி நாக்கு சுட்டுவிட்டால்
செல்வ செழிப்பு
குறைய ஆரம்பிக்கும்
அதனால் டீ
காபி பால்
போன்ற சூடான
பானங்களை மித
சூட்டோடு நுனி
நாக்கில் படாமல்
குடிப்பது நலம்,
நுனி பல்லும். நுனி நாக்கும் சூடு பட்டால் அதன் சுயதன்மையை இழந்து துடிக்கும், பின்பு அந்த பாகத்திற்குரிய தேவதை பாதிக்கப்பட்டு சாபம் பெறுவோம் . எனவே சூடான உணவுகளை நாக்கு சுட்டுபோகும்படி சுவைக்க வேண்டாம் ஆற வைத்தே சாப்பிடவும் .
வாழை பழம் கைகளால் பிரித்து சாப்பிட்டாலும் அதன் தோல் உறிக்கும் போது முதலில் அடிபகுதியான காம்பு பகுதியையே முதலில் உறிக்கவும் ,நுனிபகுதியில் உறிக்ககூடாது .
உடலின்நுனி பகுதிஎன்பது நம் தலையைக்குறிக்கும் தலையிலும் லட்சுமி வாசம் செய்வதால் தான் தலையில் யாரும் கொட்டக்கூடாது என்பார்கள், தலைமேலேயே அடிப்பேன் என்ற வார்த்தையை கூட பயன்படுத்த வேண்டாம் .
நடந்து செல்லும் போது முடிந்தளவு மனித நிழலில் தலை பாகத்தை மிதிக்க வேண்டாம், நிச்சம் வறுமை வாட்டும்,நிழலில் என்ன இருக்கிறது என நினைக்கவேண்டாம் அறிக நிழல் ராகுகேதுவை குறிப்பதாகும் இதில் குறிப்பாக தலைபாகத்தை மிதித்தோமேயானால் தோஷம் தாக்கும் எனவே சுபிட்சமாக வாழ லட்சுமி ஸ்தானத்தை அவமதிக்காதீர்கள்(தெறியாமல் மிதித்துவிட்டால் தோஷமில்லை) .
இன்னொரு தகவலையும் அறியுங்கள் தலையில் பேன் இருந்தால் அதை பார்க்கும் போது தலையிலேயே வைத்து குத்தக்கூடாது. சிரசு லட்சுமிக்குரியதால் அது புனிதமான பகுதி அதனால்தான் கங்கை சூர்யன் சிவஸ்தானம் என்றெல்லாம் வர்ணிப்பார்கள் எனவே பேனை சிரசில் இருந்து நீக்கியபின்பு வெளியில் வைத்து குத்துவார்கள், தலையில் சீப்பு படுவதால் சீப்பில் பேன் குத்த கூடாது கவனம்,
பாவங்கள் தாக்கவும் நீக்கவும் முதலில் தெய்வங்களால் பயன்படுத்தக்கூடியது சிரசுதான், அதனால் தான் 7 1/2 சனியே வந்தாலும் முதலில் சிரசையே பீடிக்கும் .
பாவம் போக்க கங்கைக்கு போனாலும் தலையுடன் தான் பாவம் தீர குளிக்க வேண்டும், ஆக சிரசு மிக முக்கியம், சுத்த லட்சுமி ஸ்தானமாகும்,
தலையை அடிக்கடி சொறிவது. தலையில் கை வைத்து உறங்குவது. முறையான தூக்கம் இல்லாமல் போவது, தேவையில்லா கற்பனை தேவையில்லா கவலை இவைகள் யாவும் தகாத செயல்களாகும், இதனால் நஷ்டம் நமக்கும் நம் குடும்பத்திற்கும் தான், வறுமையும் வெறுப்பும் பற்றிக்கொள்ளும், எனவே இதையெல்லாம் முறையாய் பாதுகாத்துக் கொள்ளுங்கள், லட்சுமி கடாட்சத்தோடு வாழுங்கள் .
இதில் உள்ள முறைகளை ஒரு மாதம் மட்டுமாவது கடைபிடித்து பாருங்கள், நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் நிச்சயம் உயர்வீர்கள், எதை நாம் அடைய விரும்புகிறோமோ அதை பற்றிய சிந்தனை நம் நினைவில் இருந்து நீங்கள் பார்த்துக் கொண்டாலே போதும், அதன் அருகில் நிச்சயம் செல்வோம் .
ஒரே செயலில் கவனம் செலுத்துவதும் தியானம் தான், அது மந்திரத்தை விட சக்தி வாய்ந்ததாகும், ஒரே லட்சியமாக செல்வ சந்தோஷத்தோடு நாங்கள் வாழ வேண்டும், எங்களால் யாருக்கும் துன்பம் ஏற்படகூடாது என நினைத்து இதில் உள்ள முறைகளை கடைபிடியுங்கள், உங்கள் வாழ்க்கை கோபுரமாகும். சந்தோஷம் சுபிட்சம் ஐஸ்வர்யம் கொண்டு வாழ்வீர்கள், இறுதி வரை நல்வழிமுறைகளை பின்பற்றவும், விரும்பியது கிடைத்தவுடன் விட்டு விடக்கூடாது .