The stamp that changes destiny ,
விதியை மாற்றும் முத்திரை
The stamp that changes destiny |
ஜாதகம் சரியில்லையா ? விதியை மாற்றும் முத்திரை
உன் செயல் என்னவோ அதுவாகவே நீ ஆகிறாய். நீ எதுவாக ஆக விரும்புகிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் இது கீதை சொல்லும் வாசகமாகும் .மனம்போல வாழ்வு என்ற தமிழ் பழமொழியும் இதே கருத்தை தான் வலியுறுத்துகின்றது .
விஷயத்திற்க்கு வருவோம் ஒருவரது பிறந்த ஜாதகம் சரியில்லை என்று ஜோதிடர் கூறிவிட்டார் அதனால் வாழ்வில் தொடர்ந்து தோல்விகள் மட்டுமே சந்திக்கவேண்டிவரும் என ஆனித்தரமாக கூறிவிட்டார் இதை மாற்றி ஜெயிக்க வழி உண்டா? இதுதான் பலரின் கேள்வி ?
ஒரு நபர் மண்ணில் பிறந்த அந்த கணத்தில் கோள்கள் ஒவ்வொன்றும் எந்தெந்த இடத்தில் இருந்தன என்பதை அடிப்படையாகக் கொண்டே ஒருவரது ஜாதகம் கணிக்கப்படுகிறது
எங்கோ தூரத்தில் இருக்கும் கோள்களால் பூமியின்மீது மனிதர்கள்மீது மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்த முடியுமா? ஆம் கோள்களால் பூமியின்மீதும் மனிதர்களின்மீதும் நிச்சயம் தாக்கங்களை உருவாக்க முடியும் என்பதை பல விஞ்ஞான ஆதாரங்கள் மூலம் நிருபித்திருக்கிறார்கள் . ஆக கோள்களால் நமது வாழ்க்கை நாம் பிறக்கும் போதே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது .
ஜனன ஜாதகத்தை வைத்து ஒரு நபரது உடல்நலம் எண்ண ஓட்டங்கள் மனநிலை கல்வி தொழில் திருமணம் என மனித வாழ்க்கையோடு தொடர்புடைய அனைத்தையும் துல்லியமாகக் கணித்துவிட முடியும் .
இந்த கணிப்பின் அடிப்படையிலேயே ஒரு நபர் சொந்தமாகத் தொழில் துவங்கலாமா அல்லது சம்பளத்திற்குதான் வேலை செய்ய வேண்டுமா ? எந்த வகையான தொழிலில் அல்லது துறையில் ஈடுபட்டால் வெற்றி கிட்டும் என்பனவற்றை ஜோதிடர்கள் ஆராய்ந்து தெரிவிக்கின்றனர் . ஜோதிடம் என்னும் விஞ்ஞானக் கலையின் அடிப்படையே உங்களது வாழ்க்கைக்கு வழிகாட்டுவதுதான் . இனி அடுத்த கேள்விக்கு வருவோம் .
ஒரு மனிதனின் ஜாதகம் எதைப் பொறுத்து அமைகிறது ?
சில மனிதர்கள் பிறக்கும்போதே அதிர்ஷ்ட ஜாதகத்துடன் பிறப்பதும் சிலர் துன்ப ஜாதகத்துடன் பிறப்பதும் ஏன் ?
இதற்கான பதிலை நமது வேதங்களிலும் புராணங்களிலும் தொன்மையான ஜோதிட நுாலிலும் தேடிப் பார்க்கும் போது , விதிப்படியே ( கர்மாவின்படி ) ஒருவரது பிறந்த ஜாதகம் அமையும் என்பது தெளிவாகிறது .
விதி வழி வாழ்க்கை
விதி என்பதற்கு கர்மா என்று ஒருபெயருண்டு . கர்மா என்றால் செயல் என்று ஓருபொருள் உண்டு . நாம் செய்த செயல்களின் அடிப்படையில் விதி அமையும் இந்த கர்மாவிலும் மூன்று வகை உண்டு
1 . முன்பிறவி கர்மாக்கள்
2 . மூதாதையர் கர்மாக்கள்
3 . சமுகத்தின் கர்மாக்கள்
நாம் நமது முன்பிறவிகளில் செய்த கர்மங்களின் பலனை இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டியதிருக்கும் . முற்பிறவிகளில் நல்ல செயல்களை செய்து நல்ல கர்மாக்களை தேடிக் கொண்டவர்கள் இந்தப் பிறவியில் அதிர்ஷ்ட ஜாதகம் கொண்டவர்களாகப் பிறக்கிறார்கள் . அவர்களது வாழ்க்கை அதிக சிக்கல்கள் இன்றி வளமாகவும் வெற்றிகரமாகவும் அமைகிறது .
முற்பிறவிகளில் பாவச்செயல்களை செய்து தீய கர்மாக்களை தேடிக் கொண்டவர்கள் இந்தப் பிறவியில் துன்ப ஜாதகம் கொண்டவர்களாகப் பிறக்கிறார்கள் . தங்களது தீய கர்மாக்களின் பலனை அவர்கள் இப்பிறவியில் செய்யும் நற்செயல்களால் சரிசெய்ய வேண்டும் .
ஆக பிறவி என்பதே நமது தீய கர்மவினை பயன்களை நல்ல செயல்களால் சரி செய்துகொள்ள தரப்படும் ஒரு வாய்ப்பாகும் .
இந்த பிறவியிலும் தொடர்ந்து நற்செயல்களைச் செய்து தங்களது தீவினை அனைத்தையும் அழித்து விட்டவர்களே முக்தி நிலையை அடைகிறார்கள் .
கர்ம பலன்கள் அனைத்தையும் சரி செய்த பின்னர் பிறவி என்பதே கிடையாது எல்லையற்ற ஆனந்த நிலையை இறையோடு இணைந்த நிலையை அவர்கள் அடைந்து விடுவார்கள் .
இது தவிர நமது மூதாதையர்களின் கர்ம பலன்களும் நம்மீது வந்து படியும் . நாம் செய்யும் நல்ல தீய கர்மாக்களின் பலன்கள் நமது பிள்ளைகளுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் தொடர்ந்து செல்லும் .
நமது புராணங்கள் மூதாதையர்களின் கர்மா ஏழு தலைமுறைகளுக்கத் தொடர்ந்து வரும் என்ற குறிப்பு உள்ளது .
இந்த இரு வகையான கர்மாக்கள் குறித்து நீங்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பீர்கள் . ஆனால் அந்த மூன்றாவது வகை கர்மா ” சமுதாய கர்ம பலன்கள் ” என்பது குறித்து பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் .
நாம் வாழும் சமூகம் இனம் நாடு இவற்றில் நடைபெறும் செயல்களுக்கும் கர்ம பலன் உண்டு .
ஒரு இனமோ சமூகமோ அல்லது நாடோ தொடர்ந்து தீய செயல்களில் ஈடுபட்டு கொண்டே வருமானால் அதனால் உருவாகும் பாவ கர்மாவில் அந்த இனத்தில் சமூகத்தில் அல்லது நாட்டில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பங்கு உண்டு . ஆக நமது கர்ம பலன்களின் அடிப்படையிலேயே நமது ஜாதகமும் விதியும் அமையும் என்பதை மட்டும் புரிந்துகொண்டால் போதும் .
கர்மாவின்படி விதியின்படி ஜாதகம் சரியில்லை என்றால் அவர்கள் இந்தப் பிறவியில் வெற்றியாளர்களாகவோ சாதனையாளர்களாகவோ மாறவே முடியாதா ? நிச்சயமாக முடியும் யோக முத்திரைகள் மூலமாக இதைச் சாதிக்க முடியும் விதியை மதியால் வெல்ல உருவாக்கப்பட்ட விஞ்ஞான முறையே யோக முத்திரைகள் .
உதாரணங்களின் மூலம் விளக்கினால் உங்களுக்குத் தெளிவாகப் புரியும் கவனியுங்கள்
1 . ஜாதகப்படி ” தன்னம்பிக்கை ” குறைவான ஒரு மனிதர் சுயதொழிலுக்கு லாயக்கில்லை என்கிறோம் அல்லவா ? அவர் தொடர்ந்து ஞானமுத்திரை போன்றவற்றை செய்து வந்தால் மிக குறுகிய காலத்திலேயே அவரது தன்னம்பிக்கை பெருகும் . இது மதியால் விதியை வெல்லது !
2 . சந்திரன் ராகு – கேது போன்ற கிரகங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளவர்களிடம்தீராத மனக்குழப்பங்கள் இருக்கும் . உறுதியான மனநிலை இராது . இவர்கள் ஞான முத்திரையைத் தொடர்ந்து செய்துவர மனதில் தெளிவும் ஞானமும் உருவாகும் . ஜாதகப்படி அவர்களிடமுள்ள இந்த குறைகளை யோக முத்திரைகளால் சரி செய்து கொள்ளலாம்
3 . சூரியனின் ஆதிக்கம் உள்ளவர்களிடம் ஆளுமைத்தன்மை முழுமையாக இருக்கும் . ஆனால் கற்பனைத்திறன் ( CREATIVITY ) அறவே இராது . சந்திரனின் ஆளுமையில் பிறந்தவர்களிடம் கற்பனைத்திறன் நிறைந்திருக்கும் . ஆனால் ஆளுமைத்தன்மை இராது ஆளுமைத்தனமை இடது மூளையால் இயக்கப்படுவது . கற்பனைத் திறன் வலது மூளை சார்ந்தது . ஒரு சுயதொழிலில் ஈடுபடுபவருக்கு இவை இரண்டுமே அவசியம் . ஹாக்கினி முத்திரையை தொடர்ந்து செய்துவரும்போது இவை இரண்டுமே வளரும் . வலது மூளையும் இடது மூளையும் ஒரே நேரத்தில் இணைந்து செயல்படத் துவங்கும் .
எனவே முத்திரைகள் பலவகை உள்ளன . ஒவ்வொன்றும் ஒரு செயலை செய்யக்கூடிதாக இருக்கும் . உங்களுக்கு எது தடையோ அதை நிவர்த்தி செய்யும் முத்திரையை தொடர்ந்து கடைபிடித்து ஜாதக விதியை உங்களுக்கு சாதகமாக வெற்றிகொள்ளுங்கள் . நமது இத்தளத்திலேயே வாழ்வில் வெற்றிதரும் பல முத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன .