The specialty of the palm ,

The specialty of the palm , உள்ளங்கையின் சிறப்பு     

The specialty of the palm
The specialty of the palm

உள்ளங்கையின் சிறப்பு     

நம் அனைவரது உள்ளங்கையிலும் சக்தி உள்ளது நேராக நிமிர்ந்து அமர்ந்த நிலையில் இரு உள்ளங்கைகளையும் விரித்து வெளிபுறமாக பார்த்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் . இரு கண்களையும் மூடிய நிலையில் உள்ளங்கைகளில் முழுமனதையும் குவித்து வைத்துக் கொள்ளும் போது நம் உள்ளங்கைகளிலிருந்து அலை அலையாக ஏதோ ஒரு சக்தி வெளிவருவதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம் . இந்த சக்தி எல்லோரிடமும் உள்ளது . நம் எதிரே யாராவது இருப்பதாக நினைத்து அவர்களது உருவத்தை மனதில் இருத்தி இவ்வாறு செய்யும்போது எதிரே நாம் கற்கனையாக நினைத்துக்கொண்டிருப்பவர் உடல் நலமடைகிறார் . சக்தி பெறுகிறார் . தொலை தூரத்தில் இருப்பவர்களுக்கும் நம்மால் இவ்வாறு கற்பனை மூலமாக சக்தியை அளிக்க முடியும் .

வயது முதிற்ச்சி மனதின் முதிற்ச்சி தெய்வபக்தி நல்லெண்ணம் இவைகள் நிரம்பியவரிடம் இச்சக்தி அதிகமாக இருக்கும் .

பெரியவர்களை வணங்கும்போது அவர்கள் உள்ளங்கைகளை விரித்து ஆசீர்வதிக்கிறார்கள் அப்பொழுது அவர்கள்  உள்ளங்கைகளில் இருந்து சக்தியானது எதிரே இருப்பவரை அடைத்து அவரது உடல் மனம் இரண்டிலும் சக்தியைக்கொடுக்கிறது . கைரேகை ஜோஸ்யத்தில் உள்ளங்கையில் உள்ள கோடுகள் விரல்கள் இவை மூலம் நமது எதிர்காலம் கணிக்கப்படுகிறது . கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று மூன்றும் கணிக்கப்படுகிறது .

 

The specialty of the palm

பிரதிபலிப்பு முறை :

நிகழ்காலத்தில் நமது உடல் நலத்தைப் பேணி காக்க உதவும் முறையே பிரதிபலிப்பு முறையாகும் . உள்ளங்கைகளில் நமது உறுப்புகள் அனைத்துக்கும் பிரதிபலிப்புப் புள்ளிகள் உள்ளன .உள்ளுறுப்புகளிலிருந்து செல்லும் நரம்புகள் உள்ளங்கைகளில் முடிவடைகின்றன . உள்ளங்கையில் உள்ள ஒரு உறுப்பின் பிரதிபலிப்புப் புள்ளியில் அழுத்தம் கொடுக்கும்போது நரம்பு நுனி தூண்டப்பட்டு அத்த தூண்டல் அவ்வுறுப்புக்கு எடுத்துச் செல்லப் படுகிறது . உறுப்பு நலமடைகிறது .

இதயம் மண்ணீரல் இவற்றின் பிரதிபலிப்புப்புள்ளிகள் இடது கையில் மட்டுமே உள்ளன . இதயம் மண்ணீரல் இவை உடலின் இடது பக்கத்தில் இருப்பதால் அவற்றின் பிரதிபலிப்புப் புள்ளிகள் இடது கையில் மட்டுமே உள்ளன . கல்லீரல் பித்தப்பை இவை நமது உடலின் வலது பக்கத்தில் உள்ளதால் இவற்றின் பிரதிபலிப்புப் புள்ளிகள் வலது உள்ளங்கையில் மட்டுமே உள்ளன. மற்ற அனைத்து உறுப்புகளுக்கும் இரு கைகளிலும் பிரதிபலிப்புப் புள்ளிகள் உள்ளன . விரல் நுனிகளில் சைனஸ் புள்ளிகள் உள்ளன .

நமது உள்ளங்கை விரல்கள் இவற்றில் எல்லாப் புள்ளிகளிலும் தினமும் சிலமுறைகள் அழுத்தம் கொடுத்தால் நம் உடலின் அனைத்து உறுப்புகளும் பலமடைகின்றன . நோய்த் தடுப்புச் சக்தி அதிகரிக்கிறது . நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன . ஏற்கனவே இருக்கும் வியாதிகளின் தாக்கம் குறைந்து மறைகின்றன . ஆக முத்திரைகளை தொடர்ந்து செய்துவரும்போது நமது மூளையும் உடலும் நோய்நொடியின்றி வளமாக வாழும் .