The basic philosophy of seals ,
முத்திரைகளின் அடிப்படைத் தத்துவம்The basic philosophy of seals |
முத்திரைகளின் அடிப்படைத் தத்துவம்
ஆகாயம் வாயு நெருப்பு நீர் மண் என்ற ஐந்து மூலப் பொருள்களும் நம் உடலில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளன . இதில் ஏதாவதொரு மூலப் பொருளின் சக்தி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மாறும் போது நமது உடல் நிலை பாதிக்கப்படுகிறது . அதிகமான சக்தியைகுறைக்கவும் குறைந்த சக்தியை அதிகமாக்கவும் செய்து உடல் நிலையைச் சீர் செய்ய முத்திரைகள் உதவுகின்றன .
நமது ஐந்து விரல்களிலும் ஐந்து மூலப்பொருள்களின் சக்திகள் உள்ளன . கட்டை விரலில் நெருப்பு என்ற மூலப் பொருளும் ஆள்காட்டி விரலில் வாயு என்ற மூலப்பொருளும் நடு விரலில் ஆகாயம் என்ற மூலப்பொருளும் மோதிர விரலில் மண் என்ற மூலப்பொருளும் சிறு விரலில் நீர் என்ற மூலப்பொருளும் உள்ளன.
கட்டை விரல் நுனியுடன் ஒன்று அல்லது மேற்பட்ட விரல்களின் நுனிகள் சேர்த்து வைக்கும் போது மூலப்பொருள்களின் சக்தி அதிகமாகிறது அல்லது குறைகிறது . அதற்கேற்றாற்போல் உடல் நலமடைகிறது .
கட்டை விரலின் மூலப்பொருள் நெருப்பு ! ஆள்காட்டி விரலின் மூலப்பொருள் வாயு . கட்டை விரலின் நுனிமேல் ஆள்காட்டி விரலின் நுனியைச் சேர்த்து வைக்கும் போது காற்றின் ஆதிக்கம் குறைகிறது . குறைந்த நெருப்பை அதிகமான காற்று அணைத்து விடுகிறது . நெருப்பின் சக்தி குறைந்து காற்றின் சக்தி அதிகரிக்கிறது .
கட்டை விரலின் அடிப்பகுதியில் ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதியை வைக்கும் போது நெருப்பின் ஆதிக்கம் அதிகமாகி காற்றின் சக்தி குறைகிறது . குறைந்த அளவுள்ள காற்றை அதிக அளவுள்ள நெருப்பு அழித்து விடுகிறது . நெருப்பின் ஆதிக்கம் அதிகமாகிறது .
நடுவிரலின் மூலப்பொருள் ஆகாயம் . கட்டை விரலின் நுனி , நடு விரல் நுனியுடன் சேரும்போது ஆகாயத்தின் சக்தி அதிகமாகவும் நெருப்பின் சக்தி குறைவாகவும் உள்ளது . ஆகவே உடலிலுள்ள வெற்றிடங்களின் பரப்பளவு அதிகமாகிறது .
நடுவிரலின் நுனி , கட்டைவிரலின் அடிப்பகுதியில் தொடும் போது நெருப்பின் சக்தி அதிகமாகவும் ஆகாயத்தின் சக்தி குறைவாகவும் இருக்கிறது .
மோதிர விரலின் சக்தி ”மண்” கட்டைவிரல்நுனியின் மோதிர விரல் நுனி தொடும்போது மண்ணின் சக்தி அதிகமாகவும் நெருப்பின் சக்தி குறைவாகவும் இருக்கிறது . அதிகமான மண் குறைவான நெருப்பை அணைத்து விடுகிறது . மோதிர விரலின்நுனி கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொடும் போது நெருப்பின் சக்தி அதிகமாகவும் மண்ணின் சக்தி குறைவாகவும் இருக்கிறது . அதிகமான நெருப்பு குறைவான மண்ணை எரித்து கரியாக்கி விடுகிறது .
சிறுவிரலின் சக்தி நீர் என்ற மூலப்பொருள் . சிறுவிரல்நுனி கட்டை விரல்நுனியுடன் சேரும்போது நீரின் சக்தி அதிகமாகவும் நெருப்பின் சக்தி குறைவாகவும் உள்ளது . அதிக நீர் குறைவான அளவு நெருப்பை தொடும் போது அணைத்து விடுகிறது .
சிறு விரலின்நுனி கட்டை விரலின் அடிப்பகுதியில் தொடும்போது நெருப்பின் சக்தி அதிகரித்து நீரின் சக்தி குறைகிறது . அதிகமான நெருப்பு குறைவான நீரை எரித்து ஆவியாக்கி விடுகிறது. மற்ற விரல்களின்நுனி கட்டை விரலின் அடிப்பகுதியை தொடும் போது கட்டை விரலை அந்த விரலின் மேல் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும் .
விரல் நுனிகள் ஒன்றையொன்று தொடும் போது லேசாகத்தொட்டால் போதுமானது . அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை . தொட்டுக்கொண்டிருக்கிற விரல் நுனிகளைத் தவிர மற்ற விரல்கள் நேராகவோ அல்லது சிறிதளவு வளைந்த திசையிலோ இருக்கலாம் .
முத்திரைகளை இருகைகளிலும் செய்ய வேண்டும் . நின்றநிலை உட்கார்ந்தநிலை படுத்துக்கொண்டநிலை நடந்துகொண்டிருக்கும் நிலை டி.வி. பார்த்துக்கொண்டிருக்கும் போது பிறருடன் பேசிக்கொண்டோ எந்த நிலையிலும் செய்யலாம் . ஒரு முத்திரையைத் தொடர்ந்து 45 நிமிடங்கள் செய்யலாம் . ஒரே நேரத்தில் தொடர்ந்து செய்ய முடியாவிட்டால் குறைந்தது15 நிமிடங்கள் செய்யலாம். பகல் இரவு எந்த நேரத்திலும் முத்திரைகள் செய்யலாம் .