Southwest direction and Kubera corner,

 

Southwest direction and Kubera corner

தென்மேற்க்கு திசையும் குபேர மூலையும்

Southwest direction and Kubera corner
Southwest direction and Kubera corner


நிருதி திசையும் குபேர மூலையும்

குபேர மூலை . கன்னி மூலை . செல்வ மூலை . லட்சுமி மூலை . ராகு மூலை . உயர்ந்த மூலை . கண மூலை . கிரிமூலை . மேரு மூலை . தெய்வ நோக்கு மூலை , காக்கும் மூலை. சேர்க்கும் மூலை . வரவு மூலை என பலபெயர்கள் தாங்கிய மூல திசை தென்மேற்கு திசையாகும், இத்திசையை எவர் ஒருவர் சிறப்பாய் பயன் படுத்துகிறாரோ அவர் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும் சரி மிக உன்னத நிலையை பெற்றுக் கொண்டே செல்வார் .

 வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் சுக்ர ஓரையில் கல் உப்பு பாக்கெட் வாங்கி வந்து அந்த மூலையில் வைத்தால் மகாலட்சுமி அருள் புரிவார் . இதை தொடர்ந்து செய்து வரவேண்டும். ஜன்னல். கதவு போன்ற திறப்பான்கள் அந்த திசையில் இருக்கக் கூடாது . அவ்வழியே காற்றோடு காற்றாக செல்வ லட்சுமி கரைந்து சென்றுவிடுவார்கள் . சேகரிக்க கூடிய பொருட்கள் எதுவானாலும் இந்த திசையின் அறையிலேயே சேகரித்து வைக்கவும். பணவரவு பெட்டி இங்கேயே வைக்கவும் . நகை. பணம். துணி. தானியம். பயன்படாத சுத்தமான சாமான்கள் எதுவானாலும் இத்திசையிலேயே வைக்கவும் . எக்காரணம் கொண்டும் அழுக்கு துணி. அடகு பத்திரம். அடகு நகை , செலவு கணக்கு , அடகு நகை ரசீது , தீட்டு பொருள் , வட்டிக்கு விடும் பணம் இவைகள் இத்திசை அறையில் வைக்கக்கூடாது .

வெப்பம் ஆகும் மோட்டார். ஏசி. சமையல் அறை. வாட்டர் ஹீட்டர் இவைகளையும் இத்திசையில் பொருந்தக் கூடாது, விருந்தினர்களை இந்த அறையில் தங்கவிடக்கூடாது . நாம் தங்கலாம், படுக்கை அறையாகவும் பயன்படுத்தலாம், அதே நேரத்தில் சூரிய உதயத்திற்குள் எழுந்து விட வேண்டும் . மீறி உதயத்திற்கு பின்பும் தூங்கினால் லட்சுமி கொடுப்பதை திருத்திக் கொள்வாள் .

தினமோ வாரமோ இந்த அறையில் மட்டுமாவது மஞ்சள் நீர் தெளித்து சாம்பிராணி புகை போடவும், வீடு முழுக்க செய்வதே சிறந்தது . இந்த அறையில் எலுமிச்சைபழம் அறுக்க கூடாது, மாமிசம் சுத்தப்படுத்துவதோ. சமைப்பதோ சாப்பிடுவதோ கூடாது . இந்த அறையை பொருத்தவரை தான்யலட்சுமி என்னும் ஐஸ்வர்ய லட்சுமி குடி கொள்ளும் பாகமாகும், (எலுமிச்சை பழம் அசுத்தம் இல்லை என்றாலும் அது பலிக்கனி இவ்விடம் அறுத்தால் பலி இடுவது போன்றதாகும், முழுமையாய் இருந்தால் தான் ஜப ஜலகனியாகும்) .

பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் அடைத்து வைக்கலாம், ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும், தேவைப்பட்தை தட்டு முட்டு சாமானாக இருந்தாலும். அளவுக்கு அதிகமான பொருட்கள் இருந்து அதை பயன்படுத்த வாய்ப்பில்லாமல் போனாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது அனைத்து பொருட்களையும் எடுத்து சுத்தபடுத்தி வைக்க வேண்டும், இதை செய்ய நம் முன்னோர்கள் ஒரு நாட்களையும் ஒதுக்கியுள்ளார்கள், அது விஜயதசமி நாளாகும், ஆயுத பூஜை மறுநாள் விஜயதசமி அன்று அவ்வாறு சுத்தப்படுத்தி வணங்கி பிறகு அவ்விடத்திலேயே அப்பொருட்களை வைக்கலாம். இவ்வாறு செய்யாத போது அந்த பொருளை பூதம் காக்க ஆரம்பித்து விடும், பின்பு நம் தலைமுறை அதை ஆளமுடியாமல் யாரோ தான் ஆளுவார்கள், இன்றைக்கும் எத்தனையோ ராஜ்ஜியங்கள். எத்தனையோ ஆலயங்கள். எத்தனையோ ஜெமின் பண்ணை குடும்பங்கள் அழிந்து போனதும். தலைமுறை தழைக்காமல் போனதும். கஷ்டப்பட்டு சேகரித்த சொத்தை அரசாங்கம் கையகப்படுத்தியதும் இதனால் தான் . எனவே சேகரிக்கும் அறையாக அது இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறையாவது சுத்தப்படுத்தி நகரச் செய்ய வேண்டும் . அதுவே சேமித்ததை ஆள நல்லது.

பின்னால் வந்தவர்கள் அனைத்து பொருட்களையும் நகர்த்திக் கொண்டிருக்க முடியாது என ஒரு உபாயத்தை கையாண்டார்கள், மணியை வேகமாக அடித்து ஒலி எழுப்பினால் அந்த ஒலி அங்குள்ள பொருட்களில் மோதி அதிர்வு அடையச் செய்யும், பொருட்களை நகர்த்த வேண்டிய அவசியமும் இல்லாமல் போகிறது எனவே இந்த முறையை கையாண்டார்கள் . ஆனால் பொருட்களை அதிரச் செய்ய முடியுமே தவிர சுத்தப்படுத்த முடியாது . எனவே அது தவறான சோம்பேறி முறையாகும் விஜயதசமி நாளையாவது பயன்படுத்தி குபேர சம்பத்துகளை மகாலட்சுமி கடாட்சரமாக (சுத்தமாக) வைத்திருங்கள், இந்த தென்மேற்கு திக்கான கன்னிமூலையை சிறப்பாக பேணி காத்து கொள்ளுங்கள் .