Seal and Panchaputhas ,

Seal and Panchaputhas , 

முத்திரையும் பஞ்சபூதங்களும்

Seal and Panchaputhas
Seal and Panchaputhas

முத்திரையும் பஞ்சபூதங்களும்

பஞ்சபூதங்களின் சக்தியின் அடிப்படையில் முத்திரைகள் செயல்படுகின்றன . பஞ்சபூதம் என்பது நாம் கானும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஆகாயம் நிலம் நெறுப்பு காற்று நீர் ஆகியளவைகளை குறிப்பதாகும் . ஐந்து மூலப்பொருள்களும் நம் உடலில் சரியான விகிதத்தில் இருக்கும் போது நமது உடல் நிலை சீராக இருக்கிறது . அண்டத்தில் உள்ளது நமது உடலிலும் உள்ளது குறிப்பாக இதை கட்டுப்படுத்தும் சக்தி நமது கைகளில் உள்ளது .

சிறுவிரல் சக்தி – நீர்

சிறுவிரல் நீரின் சக்தியை குறிக்கிறது . நமது உடலில் 70% நீர் உள்ளது . இது குறைந்தாலோ அல்லது அளவுக்கதிகமானாலோ உடல் நலம் பாதிப்படையும் . இவ்விரலின் வழியே இதய சக்திஓட்டப்பாதை செல்கிறது . இதயத்தின் நலனை பாதுகாக்கிறது .

ஆள்காட்டி விரலின் சக்தி – காற்று

ஆள்காட்டிவிரல் காற்று சக்தியை குறிக்கிறது . காற்றுசக்தி அண்ட வெளியிலிருந்து நம் உடலின் உட்புறம் சென்று பிறகு வெளிவந்து அண்ட வெளியுடன் கலக்கிறது . காற்று அடைப்புகளை நீக்கிப் பொருளை விரிவடையச் செய்கிறது காற்று எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது . இந்த இரண்டையும் கண்ணால் காண முடியாது .

கட்டை விரலின் சக்தி – நெருப்பு

கட்டைவிரல் நெறுப்பு சக்தியை குறிக்கிறது . கட்டை விரல் நெருப்பு சக்தியின் இருப்பிடம் கட்டை விரலின் சக்தியான நெருப்பு மற்ற விரல்களின் சக்தியை பாதுகாக்கிறது . அதிகப்படியான சக்தியை கிரகித்துக் கொள்கிறது . வேண்டாத அழுக்குகளை எரித்துச் சுத்தப்படுத்துகிறது . நமது உடலில் ஏற்படும் அதிக வெப்பம் என்ற சுரம் வேண்டாத பாக்டீரியாக்களை எறிக்கிறது . நெருப்புசக்தி காற்றுசக்தியை நம்பி உள்ளது . காற்று ( ஆக்ஸிஜன் ) நெருப்பு எரிவதற்கு அவசியம் நமது உடலின் செல்கள் ஆக்ஸிஜன் உதவியுடன்தான் நலம் பெருகின்றன .

நடுவிரல் சக்தி – ஆகாயம்  :

நடுவிரல் ஆகாயசக்தியை குறிக்கிறது . நடுவிரல் அனைத்து விரல்களிலும் பெரியது . ஆகாயம் அளவில்லாதது . எல்லையற்றது . இதன் சக்தியோ அளவிடற்கரியது . சொர்கத்திற்குச் செல்லப் படிக்கட்டு என்று கூறலாம் . பூமியில் நமது கடமைகளை முடித்த பிறகே சொர்க்கத்திற்கு நாம் செல்ல முடியும் .

மோதிர விரல் – மண்

மோதிரவிரல் மண்ணின் சக்தியை குறிக்கிறது . மண்ணின் சக்தியில் நமக்கு உடல் உறுதியையும் எலும்புகள் தசைகள் இவற்றின் நலனையும் பெறலாம் .

மேற்கண்ட ஐந்து மூலப்பொருள்களும் நம் உடலில் சரியான விகிதத்தில் இருக்கும் போது நமது உடல் நிலை சீராக இருக்கிறது . ஏதாவதொரு மூலப்பொருள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும் போது உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது . இந்தக் குறையை அல்லது நிறைவைச் சீராக்க முத்திரைகள் நமக்கு உதவுகின்றன .