Sangu Mudra benefits in tamil
சங்கு முத்திரை பலன்கள்சங்கு முத்திரை
இடதுகை கட்டைவிரலை வலதுகை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மீதி நான்கு விரல்களை வலது உள்ளங்கையின் பின்புறத்தில் வைக்கவும் . வலது கட்டைவிரல்நுனி இடது ஆள்காட்டி விரல்நுனியைத் தொடுமாறு வைக்கவும் . இதுவே சங்கு முத்திரை . இதை வைத்துக்கொள்ளும் போது ” ஓம் ” என்ற மந்திரத்தை பலமுறை கூறினால் அதிக பலன் கிடைக்கும் .
சங்குபோல் தோற்றமளிப்பதால் இம்முத்திரைக்கு இப்பெயர் வந்தது . வலது கட்டைவிரல் இடது கைவிரல்களால் சூழப்பட்டு இருப்பதால் வெப்பத்தின் சக்தி குறைகிறது . இடது ஆள்காட்டிவிரல்நுனி வலது கட்டைவிரல்நுனியைத் தொடுவதால் காற்றின் சக்தி அதிகரிக்கிறது . கோவில்களில் இம்முத்திரை உபயோகிக்கப்படுகிறது . தொண்டை சம்பந்தமான பல நோய்களைத் தீர்க்க இம்முத்திரை உதவுகிறது. விசுதி சக்கரம் பரிசுத்தமடைகிறது .
இம் முத்திரையின் பலன்கள் : -
- தைராய்டு பிரச்சனைகள் தீருகின்றன
- திக்குவாய் குணமாகிறது
- குரல் சுத்தமாகவும் இனிமையாகவும் ஆகிறது
- இம்முத்திரை தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளையும் தூண்டி விடுகிறது . ஆகவே தொப்புளுக்குக் கீழே ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்க உதவுகிறது .
- பசி இன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கிறது .
- உடலிலுள்ள எரிச்சலை கட்டுப்படுத்துகிறது .
- சுரத்தைக் கட்டுப்படுத்துகிறது . அலர்ஜியால் ஏற்படும் சரும நோய்களை நீக்குகிறது .
இம்முத்திரையை எந்த நேரத்திலும் வைத்துக்கொள்ளலாம் . எனினும் எந்த முத்திரையையும் மன அமைதியாக உள்ள நேரமான காலை மாலை செய்வதே உத்தமம் .