|
Kubera Mudra in-depth training |
குபேரமுத்திரை ஆழ்மன பயிற்சி
நீங்கள்
நினைத்ததை வெற்றியாக்கித்தரும் குபேர முத்திரை. உங்கள்
இலக்குகளை ஆழ்மனதில் விதைத்து விட்டால் அது அங்கே வேரூன்றிவிடும்
. ஆலமரமாக பெரும் விருட்சமாக வளரும்.
உங்கள் இலக்குகளை ஆழ்மனதில் பதியவைக்க உதவும் ஒரு மிக
முக்கியமான செல்வவரத்து பயிற்சியை இப்போது காண்போம் .
நமது புராணங்களில் அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாக
சித்தரிக்கப்படுபவர் குபேரன் . இந்த குபேரமுத்திரை பயிற்சியை
தொடர்ந்து செய்து வரும்போது நமது
கனவுகள் அனைத்தும் நனவாகும் . அனைத்து விதமான செல்வ
வளங்களும் நம்மை வந்தடையும் . எனவேதான்
இந்த முத்திரைக்கு குபேர முத்திரை என்று
பெயரிட்டனர் .
இந்தப்
பயிற்சிக்கு மிகமிக முக்கியமான தேவை
நம்பிக்கைதான் ! நான்கு
கற்களை விட்டெறிவோம் .ஏதோ ஒரு மாங்காயாவது
விழும் என்று நினைப்போடு இந்த
முத்திரை பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும்
. குறி பார்க்கும்போதே நிச்சயம் நம் குறி தப்பாது
என்ற நம்பிக்கையோடு செயல்படுபவர்களுக்கு மிக அதிகமான பலன்
மிகமிகக் குறுகிய காலத்திலேயே கிடைத்துவிடும்
.
முதலில்
இந்தப் பயிற்சியின் செயல்முறையை காணலாம் . பின்னர் இது எவ்வாறு
நமது ஆழ்மனதில் வேலை செய்கிறது என்பதை
விரிவாகக் காணலாம் .
செயல்முறை
1 . ஒரு அமைதியான இடத்தில்
அமர்ந்து மூச்சை சில நிமிடங்கள்
ஆழமாக இழுத்து விடுங்கள்
2 . மனதையும்
உடலையும் பதட்டம் இல்லாமல் அமைதிபடுத்துங்கள்
.
3 . சிறுவிரல்
மோதிர விரல் இகிய இரண்டு
விரல்களையும் மடித்து உள்ளங்கையை தொடவும்
.
4 . பிற
மூன்று விரல்களின் ( பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் ) நுனிப்பகுதிகளும் ஒன்றோடு ஒன்று தொட்டுக்
கொண்டிருக்கும்படி இணையுங்கள் .
5 . அழுத்தம்
வேண்டாம் . சற்றே லேசாக தொட்டுக்
கொண்டிருந்தால் போதும்
6 . இரண்டு
கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும்
.
7 . கைகளை
தொடைகளின் மேல் வைத்துக் கொள்ளுங்கள்
8 . உள்ளங்கைகள்
வான் நோக்கி இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள்
.
அமரும் முறை
1 . யோகாசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில்
அமர்ந்தும் செய்யலாம் .
2 . ஆசனங்களில்
பரிச்சயம் இல்லாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்து செய்யலாம் .
3 . கால்களை
மடக்கி அமர முடியாதவர்கள் ஒரு
நாற்காலில் அமர்ந்தும் ( உள்ளங்கால்கள் நன்கு தரையில் பதிந்திருக்க
வேண்டும் ) செய்யலாம் .
4 . கழுத்தும்
முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும்
.
சுவாசம்
1 . சுவாசம்
சீராகவும் இயல்பாகவும் இருக்கட்டும் .
2 . சிரமப்பட்டு
மூச்சை இழுத்து இழுத்து விடவேண்டிய
அவசியம் இல்லை .
3 . கும்பகம்
வேண்டாம் அதாவது மூச்சை வயிற்றில்
அடக்காமல் இயல்பாக இருக்கவும் .
மனநிலை
1 . மனம்
அமைதியாகவும் செய்யும் முத்திரையின்மீது குவிந்தும் இருக்க வேண்டும்
இலக்குகள் குறித்து தியானம்
1 . குபேர
முத்திரையில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்திய பின்னர்
உங்களது குறுகிய கால இலக்கு
குறித்து மனதில் தியானியுங்கள்
2 . அந்த
இலக்கு நிறைவேறிவிட்டதாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள்
3 . உங்களது
இலக்கு நிறைவேறும்போது உங்களது வாழ்க்கையில் என்னென்ன
மாற்றங்கள் நிகழும் என்பது குறித்தும்
மனதில் தியானியுங்கள்
4 . அந்த
இலக்கு நிறைவேறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன?
5 . அந்த
இலக்கை அடைய நான் செய்ய
வேண்டியது என்ன ?
6 . இந்த
இலக்கை நான் அடைய யார்
யார் எனக்கு உதவ முடியும்?
7 . முத்திரை
செய்தபடியே ( கண்களை மூடி ) உங்களது
இலக்கு குறித்து பல கோணங்களில் சிந்தித்து
சந்தோஷமாக தியானம் செய்யுங்கள் .
8 . இந்த
தியானங்களின் போது பல புதிய
கோணங்கள் புதிய உத்திகள் செயல்முறைகள்
உங்களுக்குத் தோன்றக்கூடும் .
9 . தியானம்
முடிந்தவுடன் அவற்றை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்
.
10 . அடுத்த
முறை முத்திரை பயிற்சியை செய்யும்போது இந்தப் புதிய சிந்தனைகளை
தியானம் செய்யுங்கள் .
11 . இந்தப்
பயிற்சியை தொடர்ந்து செய்யச் செய்ய இதுவரையில்
உங்களுக்கு தோன்றாத பல புதிய
வழிகள் புலப்படும் . உங்கள் இலக்கினை நீங்கள்
அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான
வழிகாட்டல் கிடைக்கும் . அதைக் கெட்டியாகப் பிடித்துக்
கொண்டு முடிந்ததை பின்தொடருங்கள் நிச்சயம் வெற்றி உண்டாகும் .
எவ்வளவு நேரம் செய்யலாம் ?
1 . குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் வீதமும் அதிகபட்சமாக 45 நிமிடங்கள்
வரையில் செய்யலாம் . ஒரு நாளில் இரண்டு
முறை செய்யலாம் .
எப்போது எந்தவேளையில் செய்வது
?
1 . காலையில்
எழுந்தவுடன் வெறும்வயிற்றில் செய்வது மிக நல்லது
2 . காலை
வேளையில் மனம் அமைதியாக இருக்கும்
. தியானம் எளிதில் கைகூடும் .
3 . காலை
வேளையில் செய்யும் போது அன்றைய தினம்
( உங்கள் இலக்கினை அடைய ) நீங்கள் செய்ய
வேண்டிய செயல்கள் குறித்த வழிகாட்டுதல் கிடைக்கும்
. அதை அப்படியே பின்பற்றுங்கள் .
4 . இரவில்
தூங்கச் செல்லும் முன்னும் ஒருமுறை இந்தப் பயிற்சியை
செய்துவிட்டுப் படுக்கலாம் ( சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை ) .
5 . இதனால்
உங்கள் இலக்கு மனதில் ஆழமாகப்
பதிந்துப்போகும் .
6 . நாம்
துாங்கும் போதுகூட நமது ஆழ்மனது
வேலை செய்து கொண்டுதான் இருக்கும்
. நமது இலக்கு குறித்து அது
தொடர்ந்து சிந்திக்கும் .
7 . தூக்க
நிலையிலும் ஆழ்மனதிலிருந்து சில செய்திகள் நமக்குக்
கிடைக்கும் . இவை பெரும்பாலும் கனவுகளாகவே
வரும் .
8 . இப்படி
கனவுகளில் வரும் செய்திகளையும் தியானம்
செய்யுங்கள் உதாசீனப்படுத்தாதீர்கள் .
எவ்வளவு நாட்கள் செய்வது
1 . குறுகிய
கால இலக்குகள் குறித்து தினமும் இந்தப் பயிற்சியில்
அமர்ந்து தியானம் செய்யவும்
2 . குறைந்த
பட்சம் மூன்று மாதங்கள் வரை செய்யலாம் . தவறில்லை
.
3 . நீண்ட
கால இலக்குகள் குறித்து வாரம் ஒருநாள் இந்தப்
பயிற்சியில் அமர்ந்து தியானம் செய்யவும் .
4 . உங்களது
நீண்ட கால இலக்குகள் நனவாகும்
வரையில் தொடர்ந்து செய்யலாம் .
குறிப்பு
1 . இலக்குகளுக்காக
மட்டுமின்றி வேறு சிறுசிறு விஷயங்களுக்காகவும்
கூட நீங்கள் இந்த முத்திரையை
செய்யலாம் .
2 . உதாரணமாக
உங்களது தொழில் சம்பந்தமாக ஒரு
நபரை நீங்கள் சந்தித்து செல்லும்
முன்னர் இந்தப் பயிற்சியில் அமர்ந்து
அந்த நபரின் உருவத்தை உங்கள்
மனக்கண்ணில் கொண்டு வரவும்.
3 . உங்களுக்கு
சாதகமாக அவர் நடந்து கொள்ளவேண்டும்
என தியானியுங்கள் .
4 . இந்தப்
பயிற்சியை செய்துவிட்டு நீங்கள் அந்த நபரை
சென்று சந்தித்தால் நீங்களே எதிர்பாராத வகையில்
அவர் உங்களுக்கு சாதகமான காரியங்களை செய்வார்
.
5 . அரசாங்க
உரிமங்கள் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தாலும்கூட
இந்த முத்திரையை பயன் படுத்தலாம்
6 . உதாரணமாக
உங்களது தொழிலுக்கான ஒரு உரிமம் மாவட்ட
ஆட்சியாளரிடமிருந்து கிடைக்க வேண்டியிருக்கிறது என்றால்
இந்த முத்திரையில் அமர்ந்து இந்த உரிமம் எனக்கு
கிடைக்க வேண்டும் என தியானம் செய்யுங்கள்
. பலன் சில நாட்களிலேயே தெரியும்
.
7 . உங்களது
வழக்கு ஏதேனும் நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தால்
இந்த முத்திரையில் அமர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவேண்டும்
என தியானம்செய்யுங்கள் . சாதகமான தீர்ப்பு கிடைக்கும்
.
8 . ஆனால்
நியாயம் உங்கள் தரப்பில் இருந்தால்
மட்டுமே உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்
என்பதையே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஆக நியாயமான பிராத்தனைகள்
நிச்சயம் நடக்கும் .
குபேர முத்திரை எப்படி வேலை செய்கிறது
?
நமது வெளிமூளை வெளிமனம் ஆகியவற்றைவிட உள்மூளையும் ஆழ்மனமும் மிகமிக அதிக சக்தி
வாய்ந்தவை என்பதை அறிக
விழிப்பு
நிலையில் வெளிமூளையும் மனமும் மட்டுமே செயல்புரியும்
. ஆழ்மனதின் செயல்பாடுகளை விழிப்பு நிலையில் உணரமுடியாது .
குபேர முத்திரையை செய்யும்போது வெளிமனதின் ஆரவாரங்கள் அடங்கிவிடுகின்றன . புலன்களின் செயல்பாடுகளும் படிப்படியாகப் கட்டுப்படுவதில் வெளிமூளையின் செயல்பாடுகளும் படிப்படியாகக் குறைகின்றன .
வெளிமூளை
விழிப்பு நிலைக்கும் ஆழ்ந்த தூக்க நிலைக்கும்
இடைப்பட்ட ஒரு நிலையை ( இதை
ஆல்பா ஸ்டேட் என்பார்கள் ) அடைகிறது
. இந்த நிலையில் வெளிமூளையின் செயல்பாடுகள் அடங்கி உள்மூளையும் ஆழ்மனமும்
திறக்கப்படுகின்றன .
மெஸ்மரிசம்
இப்னாட்டிசம் போனறவற்றிலும் இதுவேதான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஆழ்மனது
திறந்துகொள்ளும்போது உங்களது இலக்குகளை நீங்கள்
அங்கே விரித்து விடும் போது அது
அங்கே ஆழமாக பதிந்து போகிறது
.
ஆழ்மனம்
மிக சக்தி வாய்ந்தது என்பதை
ஏற்கெனவே கண்டோம் . கடந்த பிறவிகளில் நீங்கள்
பெற்ற அறிவு அனுபவங்கள் அனைத்தும்
அதில் பதிவாகியுள்ளன . பிரபஞ்ச ஞானத்துடன் ஆழ்மனம்
நேரடித் தொடர்பில் உள்ளது .
வெளிமனம்
நாம் சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் ஒரு கணினிப்போன்றது . ஆழ்மனம்
சூப்பர் கணினி மிகமிக சக்தி
வாய்ந்தது . நமது பிரச்சனைகளுக்கான விடைகளை
அது உடனுக்குடன் அலசி ஆராய்ந்து கூறிவிடும்
.
நமது வெளிமுளையின் சிந்தனையால் நாம் அறிந்து கொள்ள
முடியாத புரிந்து கொள்ள முடியாத பல
சிக்கல்களுக்கு உள்மூளைஎளிதாகப் பதில் கூறிவிடும் .
குபேர முத்திரையை செய்துவிட்டு நீங்கள் சோம்பி வீட்டிலேயே
இருந்தால் குபேரன் வந்து செல்வத்தை
கொட்டிவிட மாட்டான்
குபேர முத்திரைப் பயிற்சியில் உங்கள் இலக்குகளை நீங்கள்
அடைவதற்கான வழிமுறைகள் உங்களுக்குப் புலப்படும் . அவற்றை கெட்டியாகப் பிடித்துகொண்டு
முழுமனது்ன் உழைக்க வேண்டும் .
வியர்வைதான்
வெற்றியின் ரகசியம் என்பதை
நினையில் வைத்துக் கொள்ளுங்கள் . அதிக வியர்வையின்றி சாதிக்கும்
தந்திரத்தை தந்திரயோகம் கற்றுத்தரும் .
நமது ஆழ்மனம் நமக்கு வழிகாட்டும்
என்பது சரி . ஆனால் குபேர
முத்திரையைச் செய்துவிட்டு ஒருவரை நாம் சென்று
சந்திக்கும் போது அவர்
நமக்கு சாதகமாக செயல்படுவார் என்றால்
அது எப்படி சாத்தியமாகும் என்ற
கேள்வி மனதில் எழுகிறதல்லவா
எண்ணங்கள்
என்பதும் ஒருவகை சக்தியே . வெளிமனதின்
சிந்தனைகளுக்கும் எண்ணங்களுக்கும் கூட சக்தி உண்டு
. ஆனால் ஆழ்மனதிலிருந்து வரும் எண்ண அலைகள்
பல மடங்கு அதிக சக்தி
வாய்ந்தவை .
குபேர முத்திரையில் அமர்ந்து ஒருவரது உருவத்தை மனக்கண்ணில்
கொண்டுவந்து அவர் நமக்குச் சாதகமாக
செயல்பட வேண்டும் என தியானிக்கும் போது
ஆழ்மனதிலிருந்து உருவாகும் எண்ண சக்தி அலைகள்
அந்த நபரின் ஆழ்மனதை ஊடுருவும்
. தம்மை அறியாமலேயே அந்த நபர் நமக்கு
சாதகமாகச் செயல்புரியத் துவங்கி விடுவார் .