Hakini mudra benefits in tamil ,

 Hakini mudra benefits in tamil , 


ஹாக்கினி  முத்திரை பலன்கள்

Hakini mudra benefits
Hakini mudra benefits

ஹாக்கினி  முத்திரை பலன்கள்

படத்தில் உள்ளபடி இரண்டு கைகளின் விரல் நுனிகள் ஒன்றுடன் ஓன்று பொருந்துமாறு வைத்துக் கொண்டால் அது  ஹாக்கினி முத்திரை எனப்படும் .


இம்முத்திரையின் பயன்கள்

1 . மூளையின் வலது இடது இருபகுதிகளையும் ஒன்றிணைக்கிறது .

2 . ஞாபக சக்தியை அதிகரிக்கிறது .

3 . மூச்சு விடுதலை ஆழமாக்கி நுரையீரலைப் பலப்படுத்துகிறது .

4 . ஆழமான சுவாசத்தால் மூளையும் பயன் அடைகிறது .

5 . மன ஒருமையுடன் கூர்ந்து கவனித்தலை அதிகரிக்கச் செய்கிறது .

6 . இம்முத்திரையினால் நல்ல கருத்துக்கள் புத்தகத்தில் படித்தவை நினைவுக்கு வருகின்றன .

7 . நினைவாற்றலை அதிகரிக்கும் பயிற்சி நிர்வாகம் செய்வதற்குக் கொடுக்கப்படும் பயிற்சி ( MANAGEMENT TRAINING ) இப்பயிற்சியில் இம்முத்திரை உபயோகப் படுத்தப்படுகிறது .

8 . நமது நினைவுகள் சேமிக்கப்பட்டுள்ள மூளையின் வலது அரைக் கோளத்தைத் திறக்க உதவுகிறது .

9 . விரல் நுனிகளில் சக்திப் புள்ளிகள் உள்ளன . அவை இணையும்போது நமது சக்தி அதிகரிக்கிறது .

10 . இம்முத்திரை நுரையீரலைப் பலப்படுத்துகிறது . இம்முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் . நீண்ட நேரம் செய்யலாம் .

சர்வசாதாரணமாக யார்வேண்டுமானாலும் இம்முத்திரையை செய்யலாம் . பல பிரபலங்கள் அமர்ந்து பேசும்போது இந்த முத்திரை பிடித்துதான் பேசிக்கொண்டிருப்பார்கள் நீங்களும் கவனித்திருக்கலாம் இதன் பின்னால் உள்ள ரகசியம் மேற்ச்சொன்னதுதான் . தாங்களும் கடைபிடித்து வாழ்வை வளமாக்கிக்கொள்ளுங்கள் .