For a lucky life ,

 For a lucky life , அதிர்ஷ்டமான வாழ்விற்கு

For a lucky life
For a lucky life


அதிர்ஷ்டமான வாழ்விற்கு

 மனம் சுறுசுறுப்பாக இருந்தால் உடல் தன்னால் சுறுசுறுப்படையும், எனவே உங்கள் வாழ்வில் துக்கமான மனம் புண்படும்படியான நிகழ்வுகள். வெறுக்கத்தக்க உறவுகள். தோல்வி மனப்பான்மை. இவைகளை முதலில் மனதில் இருந்து கடின முயற்சி செய்து அப்புறப்படுத்தி விடுங்கள், மற்றவருடைய சோக நிகழ்வுகளை கேட்காதீர்கள்.

ஒருவரை பார்த்து ஐயோபாவம் என மனதில் நினைக்காதீர்கள். சோக காட்சிகளை நிஜத்திலும் சினிமா தொலைக்காட்சியிலும் காணாதீர்கள் ஒதுக்குங்கள் . சோக பாடலையும் கேட்காதீர்கள், சோர்ந்து உட்காராதீர்கள். தோல்வி அடைந்ததாக கற்பனையில் கூட நினைக்காதீர்கள், அடுத்து என்ன செய்யலாம் என மட்டும் சிந்தனை செய்யுங்கள். நடந்ததையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள், இதை கடைபிடித்தாலே வெற்றிக்கு வழி தன்னால் உருவாகும் .

சுறுசுறுப்பாக இருக்கவும் தரித்திரம் தீரவும் சில வழிமுறைகளை கடைபிடியுங்கள் . ஆணோ பெண்ணோ எந்த வயதினராக இருந்தாலும் கன்னத்தில் கை வைக்க கூடாது, தேவையில்லாமல் அடிக்கடி தலையில் கை வைப்பது  தலையை சொறிவது கூடாது, உறங்கும் போதும் கன்னத்தில் கை வைத்து உறங்ககூடாது, தலையிலும் கை வைத்து உறங்க கூடாது , மேலும் கௌந்தும் (வயிறு பூமியில் படும் படி) படுத்துறங்க கூடாது, அண்ணாந்து பார்த்தே உறங்க வேண்டும், தேவைப்பட்டால் ஆண் இடது பக்கமும். பெண் வலது பக்கமும் ஒருக்களித்து படுக்கலாம், நகத்தை பல்லால் கடிப்பதோ சுத்தமாக ஒட்ட வெட்டுவதோ கூடாது, சிறிதாவது துளிர் விட்டார்போல் நகம் வளர்ந்து இருக்க வேண்டும், மிக நீளமாகவும் நகம் வளர்க்க கூடாது தரித்திரம் பிடிக்கும் . ஆண்கள் தேவையில்லாமல் தாடி வளர்க்க கூடாது . இதை தவிர்த்த ஆண்கள் தாடி வளர்க்கும் போது பெண் வசீகரம் பாதிப்படையும். அல்லது அவர்கள் மேல் உள்ள அன்பு குறையும், விரக்தி மனப்பான்மையே உருவாகும், எனவே முடிந்தவரை தாடி வளர்ப்பதை தவிர்க்கவும் .

பெண்கள் கருப்பு பொட்டு, கருப்பு துணி , அடிக்கடி காப்பி மற்றும் மெருன் வண்ணதுணி போன்றவை ஆடைகளில் தவிர்ப்பது நன்மை, இது குடும்ப வாழ்வில் பல சச்சரவுகளை உண்டாக்கும் . கையில் வளையல் இல்லாமலும் இருக்க கூடாது . குறிப்பாக திருமணம் ஆக தடைகாணும் பெண்களும் குழந்தை பிறப்பு தாமதமாகும் பெண்களும் அவசியம் கடைபிடிக்க வேண்டும் .

விடியற்காலம் 4 மணிக்கு எழுந்து குளிக்கும் பழக்கம் யாருக்கு இருக்கிறதோ அவர்களை தரித்திரம் ஒரு போதும் பிடிக்காது , படிப்பவர்களும் இந்த நேரத்தில் படித்தால் நன்றாக மனப்பாடம் ஆகும் . பிரச்சினை இல்லா வாழ்விற்கும் நோய்நெடிகள் அகலவும் இந்த நேரத்தை கடைபிடிக்கவும் . பூஜை செய்வதும், ஆலயம் செல்வதும்,  பணிகளை தொடங்கவும், சுபநிகழ்ச்சி துவக்கவும் இந்த நேரம் உகந்தது .  ஜாதகத்தில் எவ்வளவு கெடுதி நடக்கும் நேரமாக இருந்தாலும் இந்த நேரத்தை கடைபிடித்தால் துன்பம் விலகும் . இன்றைக்கும் வெற்றி பெற்றவர்களும் நல்ல பணியில் உள்ளவர்களும் நல்ல மதிப்பெண் பெறுபவர்கள் இதைத்தான் ரகசியமாக கடைபிடித்தார்கள் இந்த சூழ்ச்சும நேரத்திற்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர் .

 நீங்களும் கடைபிடியுங்கள் வெற்றியை உணர்வீர்கள் .