Does seals give power to the brain?
முத்திரைகள் மூளைக்கு சக்தியைத் தருகிறதா?
Does seals give power to the brain? |
முத்திரைகளும் மூளைக்கு உள்ள தொடர்பும்
முத்திரைகள் செய்வதால் மூளையின் சக்தி அதிகரிக்கிறது . முத்திரைகள் மூளையின் சம்பந்தப்பட்ட பகுதியில் தூண்டல் ஏற்படுத்துகின்றன என்று ஞானியர் கண்டறிந்துள்ளனர் .
கட்டை விரலால் மற்ற விரல்களின் நுனியை வருடிக்கொடுக்கும் போது நமக்கு நல்லதோர் மன உணர்வு கிடைக்கிறது . மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது மனம் அமைதியடைகிறது .
படுக்கையில் நோயின் காரணமாகவோ அல்லது அறுவை சிகிச்சைக்குப் பின்னரோ சில நாட்கள் படுத்திருக்கும் போது மூளையின் செயல்பாடு குறைகிறது .உடல் மனம் சிந்தனை அனைத்தும் சோர்வடையும் இதற்காக மருத்துவர்கள் கை கால்களில் உள்ள தசைகளைத் தினமும் பயிற்சி கொடுத்து வலுவடையச்செய்ய சில உடற்பயிற்சிகளை செய்ய பரிந்துரைப்பார்கள் அதைப்போல நமது மூளைக்கும் பயிற்சி கொடுப்பது அவசியம் .இது முத்திரைகளில் விரல் நுனிகள் ஒன்றையொன்று தொடும்போது சாத்தியமாகிறது . முத்திரைகளை மன ஒருமைபாட்டுடன் செய்யும்போது மனதுக்குச் சாந்தி கிடைக்கிறது .
மூளை இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இடதுபக்க மூளை உடலின் வலது பக்கத்தையும் வலதுபக்க மூளை உடலின் இடதுபக்கத்தையும் ஆள்கிறது . இடதுபக்க மூளை தர்க்கம் பகுத்தாராய்தல் எண்திறன் உள்ளுணர்வு பேசும்மொழி அறிவியல் திறன் இவற்றின் இருப்பிடமாக உள்ளது . வலதுபக்க மூளை ஆக்கும் திறன் கற்பனை உணர்ச்சி இசையறிவு விழிப்புணர்வு தானாக உணர்தல் இவற்றின் இருப்பிடமாக உள்ளது . கணித பாடம் படிக்கும்போது இடதுபக்க மூளையையும் இனிமையான இசையைக் கேட்கும் போது வலதுபக்க மூளையையும் உபயோகிக்கிறோம் . இந்த இரு பகுதிகளையும் முத்திரைகள் உற்சாகப்படுத்தி நினைவாற்றல் நினைவு கூர்தல் ஆக்கசக்தி இவற்றை அதிகரிக்கிறது .
வயது அதிகமாகும்போது ஞாபகசக்தி தெளிவான சிந்தனைகள் போன்ற மூளையின் சக்திகள் குறைகின்றன . தொடர்ந்து முத்திரைகள் செய்யும்போது இச்சக்திகள் அதிகரிக்கின்றன . வயது ஒரு குறைபாடாக இல்லாமல் இருக்கும் .
பக்கவாத நோய் வந்தவர்களுக்கு விரல் நுனிகளால் செய்யப்படும் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன . விரல் நுனிகளுக்கும் மூளையின் சில பகுதிகளுக்கும் தொடர்பு உள்ளதால் இப்பயிற்சி மூளையைத் தூண்டுகிறது . விரல் நுனிகளை உபயோகித்துச் செய்யும் முத்திரைகள் முளையின் செயல்பாட்டை அதிகரிக்கின்றன .
முத்திரை பற்றி அறியாதவர்கள் இச்சிறு பயிற்சிகளால் என்ன நடக்கப் போகிறது . முத்திரைகள் பெரிதாக என்ன செய்யும் ? என்று சந்தேகப்படுவர் . அவர்கள் முத்திரைகளை செய்யும் போது அறியாமை அகன்று ஆச்சரியம் மேலோங்கி நிற்கும் .
நேர்மையான எண்ணங்களை அதிகப்படுத்த வேண்டும் . நம்விருப்பம் நேர்மையானதாக இருந்தால் திரும்பத் திரும்ப அதைப்பற்றி நினைத்து எதிர்பார்க்கும் போது நமக்கு அது கிடைக்கிறது .
எதிர்மறை எண்ணங்களான கோபம் வெறுப்பு துக்கம் குற்ற உணர்ச்சி பயம் புகைபிடிக்கும் மதுஅருந்தும் ஆசைகள் இவற்றை வெளியேற்ற திரும்பத் திரும்ப அது நம்மைவிட்டு விலக வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருந்தால் அது நம்மைவிட்டு விலகிவிடும் . இந்த எண்ணத்துடன் அழுத்தமான மூச்சும் சேர்ந்தால் சிறந்த பலன் கிடைக்கும் .
கோபம் வரும்போது மற்றவர்களிடம் எரிந்து விழுகிறோம் . நம்முடைய இயலாமையே கோபமாக உருவெடுக்கிறது . முத்திரைகள் மூலம் கோபத்தை குறைக்கும்போது இயலாமை நம்மை விட்டகன்று ” நம்மால் எல்லாம் இயலும் ” என்று மனதிடத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கோபத்தை வெற்றிகொள்ளவைக்கிறது .
கவலை வரும்போது நாம் கவலை படுவதால் என்ன நன்மை? என்று யோசிக்க வேண்டும் . மகன் அல்லது மகள் திருமணம் உடல் நிலை மிக வேண்டியவர்களின் இழப்பு இவற்றிற்கு கவலை படுவதால் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது . மாறாக கவலைப்படுவதால் நம் உடல் நிலைதான் பாதிக்கப்படுகிறது .
முத்திரைகளினால் நம் மனம்
அமைதியடைந்து மன முதிர்ச்சி ஏற்படுகிறது . மூளையும்
சுறுசுறுப்பு அடைந்து சாதிக்கவைக்கிறது .